Tuesday, July 15, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்அதிமுக ஆட்சி அமைந்தால் மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டுவரப்படும்: ராசிபுரம் ஆண்டகளூர்கேட் பகுதியில் முன்னாள்...

அதிமுக ஆட்சி அமைந்தால் மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டுவரப்படும்: ராசிபுரம் ஆண்டகளூர்கேட் பகுதியில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேச்சு

அதிமுக ஆட்சி அமைந்தால் மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும் என ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகலூர்கேட் பகுதியில் அதிமுக அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குறிப்பிட்டார்.

நாமக்கல் மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் கடந்த அதிமுக அரசின் கடந்த 10 ஆண்டுகால சாதனை விளக்க தெருமுனை கூட்டம், வீடுகள் தோறும் துண்டு பிரசுரம் வழங்கும் வாரந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் ஆண்டகளூர்கேட் பகுதியில் 22-வது வார நிகழ்வாக சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முன்னதாக நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இ.ஆர்.சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.சரோஜா முன்னிலை வகித்துப் பேசினார். இக்கூட்டத்தில் பங்கேற்று தலைமை வகித்துப் பேசிய , நாமக்கல் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி மேலும் பேசியது:

இது போன்ற கூட்டம் நான்கு ஆண்டுகள் மக்களை வாட்டி வதைக்கும் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர்., ஜெயலலிதா, எடப்பாடியாரின் மக்களுக்கான ஆட்சியை இன்னும் பத்து மாதத்தில் நடைபெறும் தேர்தலில் மீண்டும் கொண்டுவரவேண்டும். ஜெயலலிதா அரசு கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்த அரசு தான் திமுக அரசு. மக்களுக்கு ரூ.1000 கொடுக்கின்றோம் என சொல்லி 23 மாதங்களுக்கு பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு கொடுத்தனர். அதுவும் நாடாளுமன்றத் தேர்தலில் வந்தபோது தான் கொடுத்தார்கள். தற்போது சட்டமன்றத் தேர்தல் வருவதால் இப்போது விடுபட்டவர்களுக்கு தருகிறோம் என கணக்கெடுத்துக்கொண்டுள்ளனர்.

தேர்தலின் போது வாக்குகளை பெறுவதற்காக ஐந்து மாதங்களுக்கு கொடுப்பார்கள். ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், லேப்டாப் திட்டம் என எந்த திட்டமானாலும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கொண்டுவந்தார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 13 லட்சம் பேருக்கு தாலிக்கு தங்கம் கொண்டுவரப்பட்டது. ஆனால் திமுக வாக்குபெற்று வாக்குகளை பெறுவதற்காக திட்டங்களை கொண்டு வருகிறார்கள். இன்று அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தால் தான் தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டுவரப்படும். இதே போல் லேட்டாப் திட்டம் அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 58 லட்சம் லேப்டாப் கொடுத்தார்கள். அதிமுக கொண்டு வந்தது என்பதற்காக அதையும் நிறுத்தியுள்ளது திமுக அரசு. மக்களுக்கான அரசு எது என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை பார்த்து மீண்டும் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. அதிமுக அப்படியல்ல. சொன்னது நிறைவேற்றும். தற்போது சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. மாணவியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆட்சியை பற்றி யாருக்கும் கவலையில்லை. இதனால் தான் குற்றங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் சாதாரணமாக மாணவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதனை சிந்தித்து மக்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் அதிமுக ராசிபுரம் ஒன்றியச் செயலர் வேம்புசேகரன், நகரச் செயலர் எம்.பாலசுப்பிரமணியம், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலர் ஆர்.பிரகாசம், தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட துணைச்செயலர் என்.கே.தினகர் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!