சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் , பத்திரகாளியம்மன் கோயில் காவலாளியான இளைஞர் அஜித் குமாரை ஜூன் 27 ஆம் தேதி , ஒரு நகை திருட்டு தொடர்பான புகாருக்காக, போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக செக்யூரிட்டி வேலை பார்த்து வந்த இளைஞர் அஜித் குமாரை, போலீஸார் அடித்தே கொன்ற இந்த சம்பவம் தமிழ்நாட்டையே குலை நடுங்க வைத்துள்ளது. இதை மறைப்பதற்காக காவல்துறையினர் ஆளுங்கட்சியினரோடு சேர்ந்து கொல்லப்பட்ட அஜித் குடும்பத்தினரிடம் பேரம் பேசி மிரட்டியதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது*. *விடுதலைக் களம் கட்சி சார்பில் போலீஸாரின் இந்த உச்சகட்ட ஆணவப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்,*
மாண்பமை மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அஜித் குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பார்த்து அதிர்ந்துபோய், , ’’மாநிலமே தன் குடிமகனை கொன்றுவிட்டது’ என்று பதிவு செய்திருக்கிறது. நடத்தப்பட்டது பயங்கரவாதம் என்பதற்கு இதுவே சாட்சி. கடைநிலை காவலர்களுக்கே இவ்வளவு அதிகாரமும் ஆணவமும் இருந்தால் காவல்துறையின் மற்ற உயர் அதிகாரிகளுக்கு எவ்வளவு இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சரமாரியான கேள்விகளை அடுத்து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நடந்தது லாக் அப் டெத்தே இல்லை என்று சட்ட அமைச்சர் ரகுபதியே பொறுப்பற்று பேசிய நிலையில் நீதிபதிகளின் கடும் கோபத்தை உணர்ந்த காரணத்தால்தான் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியமைத்தார். சிபிஐ இந்த வழக்கை விரைவாக விசாரித்து, அஜித் குமாரை அடிக்க உத்தரவிட்ட அந்த உயரதிகாரி யார் என்பதை கண்டுபிடித்து அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்*.
*மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தாமல் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும். சீர்திருத்தங்களை தீவிரமாக அமல்படுத்திட வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு காவல்துறை இருக்கிறது*.
அஜித்குமார் கொலை…பயங்கரவாதம்! சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும்! விடுதலைக் களம் கட்சி நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் அறிக்கை!
RELATED ARTICLES