Tuesday, July 15, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைமஹேந்ரா தொழில்நுட்பக் கல்லூரியில் அணுசக்தி பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லூரியில் அணுசக்தி பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லூரியில் அணுசக்தி பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் ஆராய்ச்சி கருத்தரங்கம் மின் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில், கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி மகாத்மா காந்தி கலையரங்கில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் கல்லூரி தலைவர் எம். ஜி.பாரத் குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை, கல்பாக்கம், இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மைய தலைவர் ஜலஜா மதன் மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கருத்தரங்கில் அவர் பேசியது:

அன்றாட வாழ்வில் கதிர்வீச்சின் பயன்பாடுகள், மற்றும் பயோ கேஸ் தொழில்நுட்பம், கதிரியக்க மருந்துகளின் தொகுப்பு, நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம், விவசாயத்துறை, புதிய தலைமுறை பாதுகாப்பு அமைப்புகள், உணவு தொழில்நுட்பம், நீரியல் துறை, மருத்துவ துறை, கதிரியக்க தடங்காணிகளில் அணுசக்தி துறையின் பங்களிப்பு குறித்து விளக்கமளித்தார். மாணவர்கள் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பாடங்களில் நன்றாக படித்து அணுசக்தி துறையில் தங்களுடைய புதிய எண்ணங்களையும், செயல் வடிவங்களையும் நாட்டு நலனுக்காக செயல்படுத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும் கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் கட்டமைப்புகளை காட்சிப்படுத்தி கண்காட்சியில் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து இந்த நிகழ்வின் மூலம் மாணவ மாணவியர்களுக்கு அணுசக்தி துறையில் அபரிதமான வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் உள்ளது என்றும் இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இக்கண்காட்சியினை பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார்3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பார்வையிட்டனர். விழாவில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் அரவிந்தன், பார்த்திபன், ராமு, கல்லூரியின் செயல் இயக்குனர் ஆர்.சாம்சன் ரவீந்திரன், கல்லூரி முதல்வர்கள் இளங்கோ, சண்முகம், செந்தில்குமார்,புல முதல்வர் ராஜவேல், சரவணகுமார், பிற துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!