சேலம் செவ்வாய்பேட்டை அரசு உதவி பெறும் வாசவி மேல்நிலை பள்ளிக்கு வாசவி கிளப் கேலக்ஸி கிளை சார்பில் ரூ 21 லட்சம் மதிப்பீட்டில் நவீன ஸ்மார்ட் போர்டு, 20 கணினிகள் போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வாசவி கிளப் கேலக்ஸி தலைவர் என் ராகவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திட்ட தலைவர் பி பி மோகன் குமார் சர்வதேச வாசவி கிளப் மாவட்ட ஆளுநர் ஏ வெங்கடேஸ்வரா குப்தா ஆகியோர் பங்கேற்று மாணவ மாணவியர் வசதிக்காக பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர். பள்ளி நிர்வாக குழு தலைவர் வி.ராமச்சந்திரன், தாளாளர் எம்.கே.ராமலிங்கம் தலைமை ஆசிரியர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செவ்வாய்ப்பேட்டை வாசவி மேல்நிலைப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
RELATED ARTICLES