Tuesday, July 8, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்சென்னை அரிசி வியாபாரியிடம் ரூ.17 லட்சம் மதிப்புள்ள அரசி கொள்முதல் செய்து மோசடி: நால்வர் கைது

சென்னை அரிசி வியாபாரியிடம் ரூ.17 லட்சம் மதிப்புள்ள அரசி கொள்முதல் செய்து மோசடி: நால்வர் கைது

சென்னை அரசி வியாபாரியிடம் ரூ.17 லட்சம் மதிப்புள்ள 1153 அரிசி மூட்டைகளை கொள்முதல் செய்து மோசடியில் ஈடுபட்ட வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த நால்வரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடிவருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் என்பவரது மகன் சரவணக்குமார் (35) இவர் வெண்ணந்தூர் பகுதியில் அரிசி வியாபாரம் செய்வதாக கூறி, சென்னையைச் சேர்ந்த அரசி நிறுவனத்தின் உரிமையாளர் அருணா (43) என்பவரிடம் தொலைபேசியில் பேசி கடந்த 11.06.24 அன்று கொள்முதல் செய்துள்ளார். ஆனால் அரசி மூட்டைகள் இறக்கி வைத்துக்கொண்டு இதற்குண்டான தொகையை கொடுக்காமல் தகராறு செய்து நிறுவன ஊழியர்களை விரட்டியடித்தாராம். அரசி விற்பனை செய்த அருணா ஏமாற்றமடைந்த நிலையில் அவரை பலமுறை தொடர்பு கொண்டும் கண்டுபிடிக்கமுடியவில்லையாம். இதனால் வெள்ளிக்கிழமை இது குறித்துஅவர் வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சரவணக்குமார் (35), அவரது சகோதரர் மோகன்ராஜ் (41), சீனிவாசன், உறவினர்கள் தனசேகரன் ஆகிய நால்வரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சரவணகுமார் மனைவி சுதா, உறவினர் வேல்முருகன் ஆகிய இருவரையும் வெண்ணந்தூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!