நாமகிரிப்பேட்டை பேரூர் திமுக இளைஞர் அணி சார்பில் தண்ணீர்பந்தல்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை பேரூர் திமுக இளைஞரணி அமைப்பாளர் எம்.சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இதற்கான விழாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு ரூ.10 ஆயிரம், 2-ம் இடம் பெற்றவருக்கு ரூ.7 ஆயிரம், 3-ம் இடம் பெற்றவருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., இதனை மாணவர்களுக்கு வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் பழனிவேல், காப்புக்காரர் ரமேஷ், லோகநாதன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., பாராட்டி பரிசளிப்பு
RELATED ARTICLES