நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் லாட்டரி சீட்டுகள் தாராளமாக ஒழிவு மறைவின்றி விற்பனை செய்யப்பட்டு வருவது அனைவரும் அறிந்தது. நாகாலாந்து, கேரளா மாநிலங்களில் நெம்பர்கள் விற்கப்படுகின்றன. ஒரு நெம்பர், இரு நெம்பர், மூன்று நெம்பர், நான்கு நெம்பர் என நெம்பருக்கு தகுந்தவாறு பணம் வசூலிக்கப்படுகிறது. ஆயிரத்தில் ஒருவர் இதில் பரிசு பணம் பெறுவதை நம்பி அதிகமானோர் இதில் பேராசையால் பணத்தை இழந்துவருகின்றனர். பலர் பிரதான சாலைகளில் செயல்படும் கடைகளிலேயே விற்பனை செய்து வருவது கண்கூடாக உள்ளது. நகரின் பெரும்பாலான டீக்கடைகளில் இது தாராளமாக விற்கப்பட்டு வருகிறது. மூளை முடுக்குகளில் நின்று வி்ற்பவர்கள் ஏராளம். இது போக நடமாடும் வி்ற்பனையாளர்கள், வாடிக்கையாளரை தேடிச்சென்று டோர் டெலிவரி தரும் விற்பனையாளர்கள் என இதன் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதனை சாதாரண நடத்தர வர்க்கத்தினர், கூலித்தொழிலாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் பலரும், பெண்கள் பலரும் வரிசை கட்டி வாங்கி குவித்து பணத்தை இழந்து வருகின்றனர் என்பது தான் வேதனை. காவல்துறையின் ஒரு பக்கம் அவ்வப்போது சில அப்பாவி விற்பனையாளர்கள் மீது வழக்கு போடுவதும் வாடிக்கையானது தான். ஆனால் மறு பக்கம் வி்ற்பனையும் முனைப்புடன் தான் நடந்து கொண்டிருக்கும்.

திடீர் விற்பனை நிறுத்தம்:
இந்நிலையில் ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் 26.6.2025 பிற்பகல் முதல் லாட்டரி வி்ற்பனை செய்யப்பட்டு வந்த கடைகள் தீடிரென நிறுத்தப்பட்டு அது போன்ற கடைகள் மூடப்பட்டதாம். நடமாடும் வி்ற்பனை செய்பவர்களிடம் விற்பனை செய்ய வேண்டாம் என உத்தரவு வந்ததாம். இதனால் நகரில் லாட்டரி விற்பனைகள் நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக லாட்டரி வி்ற்பனை தாராளமாக நடந்து வரும் நிலையில், அனைத்து கடைகளையும் மூடச்சொல்லி காவல்துறையிடம் இருந்து வந்த ரகசிய தகவலால் விற்பனை நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் லாட்டரி சீட்டின் மீது மோகம் கொண்ட வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். விற்பனை தற்காலிகமாக நிறுத்தச்சொல்லி வந்த உத்தரவு ஏதற்காக?ஏன்? காரணம் என்ன? யாரிடம் இருந்து வந்த உத்தரவு இது? என வாடிக்கையாளர்கள் பேசிக்கொண்டனர். காவல்துறையின் இந்த திடீர் கடமையாற்றலுக்கு காரணம் என்னவோ? அவர்களே அறிவர்.