Tuesday, July 15, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்வணிகர் சங்கப் பேரவைப்புடன் டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கம் இணைப்பு

வணிகர் சங்கப் பேரவைப்புடன் டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கம் இணைப்பு

தமிழ்நாடு வணிகர்கள் சங்கப் பேரமைப்புடன் நாமக்கல் தாலுக்கா டயர் ரீட்ரேடிங் சங்கம் 50-வது சங்கமாக இணைந்துள்ளது.
நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சங்கத்தின் தலைவர் வரதராஜ் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. மாநில தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் பேரமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் இணைவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் பேசினார்.
தொடர்ந்து நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் சங்கமானது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இணைப்பு சங்கமாக இணைந்தது. இது மாவட்ட பேரமைப்போடு இணையும் 50வது சங்கம் என்பது குறிப்பிடதக்கது. இணைப்பு சந்தாவினை பேரமைப்பின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டார். கூட்ட முடிவில் பொருளாளர் மல்லீஸ்வரன் நன்றி கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!