ராசிபுரம் அருகேயுள்ள புதுசத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஜே.இ.இ முதன்மைத் தேர்வு முடிவுகளில் சிறப்பிடம் பெற்று சாதனைப் புரிந்துள்ளனர். ஜே.இ.இ முதன்மைத் தேர்வு – 2025 முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் இப்பள்ளி மாணவி நிதர்சனா 99.91 சதம், மாணவர் சுசிர் குமரவேல் 99.90 சதம், சித்தரஞ்சன் 99.86 சதம், திவேஸ் வேலவன் 99.83 சதம், தேவதர்சன் 99.66 சதம் மதிப்பெண்கள் பெற்றனர். மேலும் 40 மாணவ, மாணவிகயர்ள் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் லபெற்று சாதனை புரிந்துள்ளனர். இதில் 27 மாணவ, மாணவியர்கள் 95 சதவீதத்திற்கு மேல் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகள் அகில இந்திய போட்டித் தேர்வு நிறுவனமான ஆகாஷ் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக பள்ளிக் கல்வி படித்து கொண்டிருக்கும் பொழுதே பாவை மாணவர்களுக்கு கிடைக்கும் நுழைவுத் தேர்வு பயிற்சி ஐஐடி, ஐஐஐடி, ஜேஇஇ, ஒலிம்பியாட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று, நாட்டின் தலைசிறந்த மருத்துவ கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பொறியியல் கல்வி படிப்பதற்கு இடம் கிடைக்க வழி வகை செய்கிறது.
மேலும் நாட்டின் தலைசிறந்த அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகள், அரசு பல் மருத்துவ கல்லூரிகள், அரசு ஹோமியோபதி, சித்தா போன்ற ஆயுஷ் படிப்புகளுக்கான கல்லூரிகள் மற்றும் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் எளிதாக இடம் கிடைத்திடும் வாய்ப்புகள் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைகின்றன. சாதனை புரிந்த மாணவ, மாணவியரை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், இயக்குநர் (சேர்க்கை) வழக்கறிஞர் கே.செந்தில், பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் முனைவர். சதீஸ், முதல்வர் எஸ்.ரோஹித், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தொிவித்தனர்.