Thursday, June 19, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைகுமாரபாளையம்: 10, 11-ஆம் வகுப்பு தேர்வுகளில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

குமாரபாளையம்: 10, 11-ஆம் வகுப்பு தேர்வுகளில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

10, 11-ம் வகுப்பு தேர்வுகளில் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். நடந்து முடிந்த 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 190 பேர் தேர்வு எழுதியதில் 186 பேர் தேர்ச்சி பெற்றதில் 98 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று, சாதனை படைத்தனர். மாணவிகள் தீக்சிதா 494, சுபஸ்ரீ 491, நவின்யா 486, ஆகிய மாணவிகள் முதல், இரண்டாம், மூன்றாம் இடம், பெற்றனர். அறிவயல் பாடத்தில் அவந்திகாஸ்ரீ, தீக்சிதா, நவின்யா ஆகியோர் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், அன்சிகா, அவந்திகாஸ்ரீ, தீக்சிதா, தர்சனா, கீதாஞானி, சுபஸ்ரீ ஆகிய ஐவர், சமூக அறிவயல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.

நடந்து முடிந்த 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 268 பேர் தேர்வு எழுதியதில் 257 பேர் தேர்ச்சி பெற்றனர். யாமினி, 564 தேவதர்ஷினி 560, சபர்ணா 545, யுவஸ்ரீ 541 ஆகிய மாணவிகள் முதல், இரண்டாம், மூன்றாம் இடம், நான்காமிடம் பெற்றனர். சாதனை படைத்த மாணவியரை தலைமையாசிரியை காந்தரூபி, துணை தலைமை ஆசிரியை சாரதா, உள்பட ஆசிரியைகள், ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!