நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2025 –ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் 195 பள்ளிகளை சார்ந்த 8,813 மாணவர்களும், 9,116 மாணவிகளும் என மொத்தம் 17,929 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 8,312 மாணவர்களும், 8,840 மாணவிகளும் என மொத்தம் 17,152 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்களின் தேர்ச்சி 94.32% தேர்ச்சி மாணவிகளின் தேர்ச்சி 96.97% என மொத்தம் 95.67% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 89 அரசுப் பள்ளிகளை சார்ந்த 4,149 மாணவர்களும், 4,809 மாணவிகளும் என மொத்தம் 8,958 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 3,721 மாணவர்களும், 4,577 மாணவிகளும் என மொத்தம் 8,298 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 92.63 % ஆகும்.
நாமக்கல் மாவட்டத்தில் 01 ஆதி திராவிட நல பள்ளியினை சார்ந்த மொத்தம் 74 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 68 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 91.89% ஆகும்.
நாமக்கல் மாவட்டத்தில் 5 பழங்குடியினர் நல பள்ளிகளை சார்ந்த மொத்தம் 311 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 306 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 98.39% ஆகும்.
நாமக்கல் மாவட்டத்தில் 1 சமுக நலத்துறைப் பள்ளியினை சார்ந்த மொத்தம் 8 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 87.5% ஆகும். 6 அரசு உதவிப்பெறும் பள்ளிகளை சேர்ந்த 544 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 512 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 94.12% ஆகும்.இவ்வாண்டு 70 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளில் 12 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., தெரிவித்தார்கள்.