Saturday, August 30, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரிக்கு சர்வதேச கிராண்டியர் விருது-2025

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரிக்கு சர்வதேச கிராண்டியர் விருது-2025

புதுதில்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது

ராசிபுரம் – வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரிக்கு, “சர்வதேச கிராண்டியர் விருதுகள் – 2025″ என்ற தலைப்பில்,”புதுதில்லியில் நடைபெற்ற நடப்பு ஆண்டின் மிகவும் வளர்ந்து வரும் உயர்கல்வி நிறுவனம்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறையில் சிறந்து விளங்குதல் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு நிறுவனங்களை கெளரவிக்கும் வகையில் இவ்விழா நடைபெற்றது. இதில் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் எஸ்.பி.விஜயகுமார் சார்பாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறை புலமுதன்மையர் ந.சுதாகர் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ரயில்வே மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சருமான சுரேஷ்பிபிரபு, இந்திய அரசுக்கான காம்பியா குடியரசின் தூதர் முஸ்தபாஜவாரா, புதுதில்லி – லத்தின் அமெரிக்க ரீபியன் வர்த்தக கவுன்சிலின் ஆணையர் டாக்டர் செனோரிட்டாஐசக், இந்தியாவின் யுனைடெட் சமாரியன்ஸ் நிறுவனத்தைச்சார்ந்த டாக்டர்.ஷீபாலூர்தஸ், புதுதில்லி முன்னாள் அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

கல்விச் சிறப்பு, ஆராய்ச்சியில் புதுமை மற்றும் சமூகதாக்கத்திற்கான செயல்பாடுகளில் ஈர்ப்பு கொண்ட நடுவர்களின் ஒருமித்த முடிவால் இந்த விருதானது வழங்கப்பட்டது. இவ்விருது பெற்றது குறித்து கல்லூரியின் தாளாளர் கே.பி.ராமசாமி, செயலர் ஆர்.முத்துவேல்ராமசாமி ஆகியோர் கூறுகையில், இத்தகைய பாராட்டுதல் மற்றும் விருது பெறப்பட்டதன் மூலமாக, இந்தியாவின் உயர்கல்வித்துறையில் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி ஒரு வளர்ந்து வரும் சக்தியாகவும் எதிர்கால சந்ததியினருக்கு கல்வி மற்றும் கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாகவும் உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!