ராசிபுரத்தில் ஸ்ரீராமநவமி விழா பூஜைகள் கோலாட்டத்துடன் நடைபெற்றது. ராசிபுரம் கெளரவு பலிஜவார் நாயுடுகள் சங்கம் சார்பில் ஸ்ரீராமநவமி விழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கும். இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான விழா ஏப்.6-ல் தொடங்கி நாள்தோறும் நடைபெற்று வருகிறது. பத்துநாட்கள் நடைபெறும் இவ்விழாவில் புதன்கிழமை பஜனை படத்தில் ஸ்ரீ ராமர் சீதாதேவி உற்சவர் விழா கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ ராமர் சீதாதேவி சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக பல்வேறு பக்தி பஜனை பாடல்கள் பாடினர். தொடர்ந்து கோலாட்டம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் வருகின்ற 15ஆம் தேதி
பஜனை மடத்தில் ஸ்ரீ ராமர் சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். தொடர்ந்து மறு நாள் மஞ்சள் நீராடல், ஸ்ரீ ஆஞ்சநேயர் பூஜை உடன் விழா நிறைவு பெறும்.
இந்த நிகழ்வில் சங்கத்தின் தலைவர் சிட்டி (எ) வரதராஜன், செயலாளர் என்.பாலசுப்பிரமணி, பொருளாளர் எம்.ரஞ்சித், துணைத் தலைவர்கள் ஜி. ராமலிங்கம் (எ) தினகர், எஸ். சீனிவாசன், இணைச் செயலாளர்கள் கே.பாபு, ஆர். சக்திவேல், எஸ். ஆர். சீனிவாசன், மற்றும் சமூகத்தார்கள் என பலர் கலந்து கொண்டனர்.