மல்லசமுத்திரம் மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பாக சர்வதேச கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் கல்லூரியின் தலைவர் எம்.ஜி.பரத்குமார் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் நிர்மல்குமார், பெங்களூர் போஸ் நிறுவனத்தைச் சார்ந்த கோகுல்ராஜ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். இக்கருத்தரங்கில் மூலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி பல்வேறு புதிய கருத்துக்கள், சமுதாய நலனுக்காக மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவிக்கும் காட்சிப்படுத்துதல், தகவல் தொடர்பு துறையில் இருக்கக்கூடிய புதுமை படைப்புகள், இன்றைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக மாணவர்களின் கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் நடைமுறைகள் குறித்தும் பேசினர்.
மேலும் கருத்தரங்கில் தேர்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் முன்னணி அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்டன. 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டனர். இக்கருத்தரங்கில் கல்லூரியின் செயல் இயக்குனர் இரா. சாம்சன் ரவீந்திரன், கல்லூரி முதல்வர் இளங்கோ, துறைத் தலைவர் பிரபு உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட சிறந்த கட்டுரைகளுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.