நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள ஆர். பட்டணம் ஆனந்தா கல்வி நிறுவனத்தின் சார்பில், 24-வது மழலையர் பட்டமளிப்பு விழா மற்றும் அகாடமி சாதனை நிகழ்ச்சி பட்டணம் ரங்கசாமி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக என்ஜினியர் என். மாணிக்கம், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் எம்.ஏ.உதயகுமார், பட்டணம் பேரூராட்சி துணைத்தலைவர் பொன். நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு மழலையர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த கலை நிகழ்ச்சியல் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஆனந்தா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் என்.சக்திவேல் நடேசன், செயலாளர் ஏ.கஸ்தூரி சக்திவேல், இங்கிலாந்து ஆஸ்டன் பல்கலைகழகத்தின் தொழிமுனைவோர் ஆலோசகர் எஸ்.கே.ஆதித்யா சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர். மேலும் இவ்விழாவில், மேச்சேரி மீனம்பார்க் பள்ளியின் செயலாளர் டாக்டர் எஸ்.திவ்யபாலா, பள்ளி முதல்வர்கள் என்.ரமேஷ்குமார், ஏ.அருண், பொறுப்பாசியர்கள், ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.