கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சர்வதேச விளையாட்டு தினத்தை தொடர்ந்து உடல் உறுதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஒட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது.

ராசிபுரம், சேலம் சாலையில் சுஜிதா திருமண மண்படம் முன்பாக தொடங்கிய ஒட்டத்தை கொ.ம.தே.க., பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான, இ.ஆர்.ஈஸ்வரன், முன்னாள் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் பங்கேற்றோர் ஏடிசி டெப்போ, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, சேலம் சாலை, ராசிபுரம் நகர் பகுதி என பல்வேறு சாலைகளின் வழியாக சென்று மீண்டும் முத்துக்காளிப்பட்டி பகுதியை அடைந்தனர். மாரத்தான் போட்டி 10 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர் முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் வரை என 12 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உடல் ஆரோக்கியத்தை குறித்து விழிப்புணர்வு செய்தனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பரிசு தொகை , பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் உள்ளிட்ட கொ.ம.தே.க., நிர்வாகிகள் பலரும் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.