Friday, April 18, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeதகவல்கள்நாமக்கல்லில் இலவச நீட் தேர்வு பயிற்சி மையம்

நாமக்கல்லில் இலவச நீட் தேர்வு பயிற்சி மையம்

நாமக்கல்லில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் இன்று (30.03.2025) தொடங்கப்பட்டது. அப்போது, மத்திய தகவல்-ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் L. முருகன், புதுதில்லியில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்து, இப்பயிற்சியில் கலந்துகொள்ள வந்திருந்த மாணவ- மாணவிகளுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகள தெரிவித்துக் கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவ மாணவிகள் நீட் தேர்வு இலவச (NAMO) பயிற்சி மையம், நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள இராம விலாஸ் கார்டன் பகுதியில் புதிதாக நிறுவப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று(30.03.2025) நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட, நாமக்கல்லை சேர்ந்த கல்வி நிலைய நிறுவனர் / கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் K.P. சரவணன், குத்துவிளக்கு ஏற்றி வைத்து, இம்மையத்தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மேனேஜிங் டிரஸ்டி A.R. சக்திவேல், டிரஸ்டி R.K. காந்தி, பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் M. இராஜேஷ்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி இலவச NEET பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தனர்.

அப்போது மத்திய தகவல்-ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், புதுதில்லியில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம், நாமக்கல்லில் உள்ள இந்த இலவச நீட் பயிற்சி மையத்தை தொடர்பு கொண்டு, இன்று திறப்பு விழா செய்யப்பட்டுள்ள மையத்திற்கும் பயிற்சி வகுப்பில் சேர வந்த மாணவ- மாணவிகளுக்கு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

அப்போது தொலைபேசி வழியே பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் L. முருகன், ஏழை எளிய மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக, எந்தவித தடங்களும் இன்றி நீட் தேர்வை எழுத வேண்டும், பயிற்சி பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசமாக இந்த நீட் பயிற்சி மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது நாடு வருகின்ற 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதமாக திகழ வேண்டும் வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். அந்த நோக்கத்தோடுதான் இன்று இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு இளைய சமுதாயத்தை முன்னேற்ற / பலப்படுத்தும் வகையில், நமது மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நான் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக உங்களிடம் கலந்துகொள்ள வேண்டும் என்ற திட்டமிடல் இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று நாமக்கல்லுக்கு வர முடியவில்லை என்றாலும், மீண்டும் ஒருமுறை அங்கு நேரடியாக வந்து உங்களிடம் கலந்துரையாட காத்துக் கொண்டுள்ளேன். இந்த பயிற்சி முகாமை நன்கு பயன்படுத்திக்கொண்டு, நீட் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி அடைந்து, வருங்காலத்தில் நல்ல தலைசிறந்த மருத்துவராக வரவேண்டும். இந்த சமுதாயத்திற்கு உங்களுடைய சிறப்பான பங்களிப்பு அளிக்க வேண்டும். அதற்காக நீங்கள் கடுமையாக உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள், மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மத்திய தகவல்-ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைய அமைச்சர் L. முருகன் தெரிவித்தார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில், சிறப்புரையாற்றி பேசிய நாமக்கல் கல்வியாளர் / கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் K.P. சரவணன், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்ற அதே வேளையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் இது போன்ற இலவச நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை தொடங்கி நடத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனால் ஏழை எளிய மாணவ மாணவிகள் பெரிதும் பயன்பெறுவார்கள். இந்த பயிற்சி மையம் இங்கு அமைக்கப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்கள் நல்லாதரவு அளித்து வருகிறார். அவரின் வழிகாட்டுதலோடு இந்த மையத்தில் ஆசிரியர்கள் சிறந்த முறையில் மாணவ மாணவிகளுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை இலவசமாக வழங்க உள்ளனர். இதன் மூலம் மாணவ மாணவிகள் நீட் தேர்வு அச்சத்தை போக்கி சிறந்த முறையில் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 40 நாட்களுக்கு நடைபெறும் இந்த பயிற்சியை ஒரு நாள் கூட விடுபடாமல் மாணவ மாணவிகள் மிகுந்த கவனத்துடன் கலந்துகொண்டு பயிற்சி பெற வேண்டும். அதற்காக இந்த துறையில் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இங்கே பணியாரத்தப்பட்டுள்ளார்கள் இதனை நல்ல முறையில் மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாமக்கல் கல்வியாளர் / கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் K.P. சரவணன் கேட்டுக்கொண்டார்.

முன்னிலை உரையாற்றி பேசிய, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் டிரஸ்டி R.K. காந்தி, இந்த மையம் இன்று நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியை வழங்குவதோடு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் அக்னி வீரர் & மத்திய-மாநில அரசு பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் இலவசமாக பயிற்சிகளை வழங்கும். இலவசமாக வழங்கப்படும் இந்த பயிற்சிகளை மாணவ மாணவிகள் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தலைமை உரையாற்றி பேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மேனேஜிங் டிரஸ்டி A.R. சக்திவேல், ஒரு காலத்தில் மருத்துவ படிப்புகளை பணம் இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலைமை இருந்தது. அதனை மாற்றி அனைத்து தரப்பு மாணவ மாணவிகளும் நீட்டு தேர்வை எழுதி மருத்துவ படிப்புகளை படிப்பதற்கு மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இலட்சியத்துடன் கனவு காணுங்கள் என்று இளைஞர்களை அறிவுறுத்தினார் இன்று நமது இளைஞர்கள் தமது லட்சியங்களை அடைந்து வருகின்றனர் அதற்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. எங்களைப் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அரசாங்கத்தோடு இணைந்து இது போன்ற சேவைகளை வழங்கி வருகிறோம். நகர்புற மாணவ மாணவிகள் மட்டுமல்லாது கிராமப்புற மாணவ மாணவிகள் நீட்டு உள்ளிட்ட அனைத்து விதமான தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே இந்த மையம் என்று தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் தன்னார்வ தொண்டு நிறுவன பயிற்சி மைய ஆசிரியர்கள் Anisha, காயத்ரி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன், மாணவ மாணவிகள் பெற்றோர், பயிற்சி மைய நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!