Monday, March 17, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்லோக் ஆயுக்தா உறுப்பினர் வி.ராம்ராஜ் க்கு பாராட்டு விழா

லோக் ஆயுக்தா உறுப்பினர் வி.ராம்ராஜ் க்கு பாராட்டு விழா

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் வி. ராமராஜுக்கு பிரிவுச்சாரம் மற்றும் பாராட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது.

டாக்டர் வி.ராமராஜ் பல்வேறு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி காலங்களில் வழக்குகளில் விரைவாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் தீர்ப்புகள் வழங்கியவர் என்பதும், இதனால் பிற மாவட்ட வழக்குகளை விசாரிக்கவும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே குருகிய காலங்களில் அதிக தீர்ப்புகள் வழங்கியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. இதனையடுத்து தற்போது அவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான அந்தஸ்து கொண்ட மாநில லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் இந்த அமைப்பில் அவர் அமர்த்தப்பட்டிருப்பதன் மூலம் இது போன்ற வழக்குகளிலும் விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என விழாவில் பேசியவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். இதே போல் விழாவில் பேசிய நாமக்கல் சட்டக் கல்லூரி மாணவ மாணவியர்கள், நீதிபதி வி.ராமராஜ் , வழக்கு விசாரணையாகட்டும், செயல்பாடுகளிலும், நேரமேலாண்மை, ஒழுக்க உணர்வு, நேர்மை போன்றவற்றில் தங்களுக்கு ரோல் மாடல் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் சுட்டிக்காட்டினர். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு நினைவு பரிசளித்து, கெளரவித்து பாராட்டிப் பேசினர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!