நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சீராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவில் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ந.செங்கோட்டுவேல் வரவேற்றுப் பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் ப.புவனேஸ்வரி தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் இரா.பழனிசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். முன்னதாக உதவி ஆசிரியர் தேவி ராணி ஆண்டறிக்கை வாசித்தார். பெற்றோர் ஆசிரியக் கழகத் தலைவர் ராஜகோபால், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அம்சவேணி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களின் நடனம், நாடகம், சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும், தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டனர். முடிவில் உதவி ஆசிரியர் கோ.கி.தேவிராணி வரவேற்றுப் பேசினார்.