Thursday, March 13, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்- கே.பி.ராமலிங்கம் பங்கேற்பு

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்- கே.பி.ராமலிங்கம் பங்கேற்பு

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சேலம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட, மாவட்டங்களில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படுகிறது என்றும், ஏழை- எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்கு முன்மொழிக் கொள்கை அடித்தளமாக அமையும் என்றும் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் Dr. K.P. இராமலிங்கம் தெரிவித்துள்ளார்*

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து சமக்கல்வி எங்கள் உரிமை என்னும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை கட்சியின் மாநில துணைத் தலைவரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டர் பி. இராமலிங்கம் தொடங்கி வைத்தார். மேலும் கட்சி நிர்வாகிகளிடம், பொதுமக்கள் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிடம் படிவங்களை வழங்கினார்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கையெழுத்த இயக்க பதாகையில் கையெழுத்து இட்டு இதனை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் முன்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து விட்டனர்.

அப்போது பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே ராமலிங்கம், பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அனைத்து மாணவ மாணவிகளும் பயன்பட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளார். ஏற்கனவே இருந்த புதிய கல்விக் கொள்கைக்காக டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைந்த குழு, அந்தந்த மாநில பாட மொழி தாய் மொழியாகவும், இணைப்பு முறை ஆங்கிலம், மூன்றாவதாக ஹிந்தி தேவையான காங்கிரஸ் ஆட்சி காலம் வரை தெரிவித்திருந்தது. இந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு, கட்டாயம் இந்தி மொழி என்பதை நீக்கிவிட்டு, மூன்றாவதாக எந்த மொழியை வேண்டுமானாலும் அவரவர் விருப்பத்தின் பேரில் படித்துக் கொள்ளலாம் என அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் தாய்மொழி தமிழ் பாட மொழியாகவும், இணைப்பு மொழி ஆங்கிலம், மூன்றாவது மொழியாக ஏதேனும் பட்டியலில் உள்ள விருப்பப்பட்ட மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

நாமக்கல், இராசிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தெலுங்கு, கன்னடம் பேசுபவர்களுக்கு, எழுத படிக்க தெரியாத நிலை உள்ளது.

மும்மொழி கொள்கையை தடுக்கும் உரிமை தமிழக அரசுக்கு கிடையாது என்றும்,

சேலம் பெருங்கோட்ட கோட்டத்திற்கு உட்பட்ட கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக மொத்தம் 10 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு மாநில தலைவரிடம் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக தொண்டர்கள் தலைநகர் முதல் கிராமங்கள் வரை ஒவ்வொரு பூத் வரை சென்று கையெழுத்து பெறுவார்கள். மே மாதத்திற்கு ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவரிடம் வழங்கப்படும். என்றும், பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே. இராமலிங்கம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!