தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை தொடர்ந்து குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நகர்மன்றத் தலைவர் விஜய்கண்ணன் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நகராட்சி தலைவராக பதவியேற்று, நான்காம் ஆண்டு விழாவையொட்டி, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில்பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் நகர்மன்றத் தலைவர் விஜய்கண்ணன், தலைமை டாக்டர் பாரதி தலைமையில் மோதிரத்தை குழந்தைக்கு அணிவித்தார். இதில் கொத்துக்காரன்காடு பகுதியில் வசிக்கும், கூலித் தொழிலாளிகள் சபரிகிரி, கலைவாணி தம்பதியரின் பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நகராட்சி தலைவரின் நான்காம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, தலைமை டாக்டர் பாரதி சால்வை அணிவித்து, புத்தகம் பரிசாக வழங்கினார். மருத்துவமனை பணியாளர்கள், கவுன்சிலர்கள், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்து கூறினர்கள்.