Wednesday, March 19, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்வையப்பமலை மரப்பரை அருகே கோவில் விழாவில் இரு தரப்பில் பிரச்சனை: போலீஸ் நடவடிக்கை கோரி போலீஸ்...

வையப்பமலை மரப்பரை அருகே கோவில் விழாவில் இரு தரப்பில் பிரச்சனை: போலீஸ் நடவடிக்கை கோரி போலீஸ் நிலையம் முன் விஷம் அருந்தியவர் மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் மாவட்டம் வையப்பமலை மரப்பறை அருகே உள்ள அங்காளம்மன் கோவிலில் மாசி சிவராத்திரி விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரையே தகராறு இருந்து வந்துள்ளது.

கோயில் சிவராத்திரி விழாவிற்கான கங்கணம் கட்டுவதில் இருந்து வந்த பிரச்சனை தொடர்பாக உள்ளுரை சேர்ந்த பழனியப்பன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தொப்பப்பட்டி பகுதியை சேர்ந்த பரம்பரையாக கங்கணம் கட்டும் உரிமை பெற்ற, நித்யானந்த் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பலமுறை எலச்சிபாளையம் காவல் நிலையத்திலும் புகார்கள் உள்ளது. காவல்துறையினரும் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் மயான கொள்ளை நிகழ்ச்சி தொடர்பாக இரு தரப்பிலும் பிரச்சனை ஏற்பட்டு நித்தியானந்த் என்பவர் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து நித்தியானந்த் என்பவர் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் உடனடியாக எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிகிறது.
இதனால் எறும்பு மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்ற அவரை உடனடியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!