குமாரபாளையம் ராயல் சர்வதேச பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
குமாரபாளையத்தில் உள்ள ராயல் சர்வதேசப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா தாளாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. செயலாளர் திரு.முருகேசன்,பொருளாளர் கவிதா ஆனந்தன் மற்றும் பள்ளி முதல்வர் ராஜஸ்ரீ உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். இதில் குழந்தைகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், வினாடி வினா, மௌன மொழி நாடகம் மற்றும் அவை சார்ந்த பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தும் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை மகிழ்விப்பதற்காக அக்குவாரியம் போன்ற அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பின்பு குழந்தைகள் களப்பயணம் பற்றிய தங்களின் அனுபவங்களை மிக ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கூறினர். இதனை தொடர்ந்து பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் முதல்வர் குழந்தைகளுக்கு பட்டங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.