ராசிபுரம் அருகே தனியார் நூற்பு ஆலையில் திருட முயன்ற மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராசிபுரம் அருகே உள்ள சேந்தமங்கலம் பிரிவு பாதையில் தனியார் நூற்பு ஆலை உள்ளது. தற்சமயம் செயல்படாமல் உள்ள இந்த ஆலையில் ஏராளமான எந்திரங்கள் உள்ளன. இந்த ஆலையில் உள்ள காப்பர் வயர்களை திருடும் நோக்கத்தில் சிலர் சுற்றி இருந்தது தெரியவந்தது. செவ்வாய்க்கிழமை இரவு சேந்தமங்கலம் பிரிவு பாதையில் இரவு ரோந்து பணியில் டிஎஸ்பி விஜயராகவன் தலைமையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் ஸ்குரு டிரைவர் உள்ளிட்ட கருவிகள் பையில் இருந்ததும் தெரிய வந்தது.
இதனை எடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் ஆலையில் திருட முயற்சியை செய்தது தெரியவந்தது.
உங்களுக்காக இதனை அடுத்து,
காட்டுக்கார (எ) சரவணன் (43) த/பெ செல்வம் 2/26-பழனியப்பன் காடு அம்மணி கொண்டலாம்பட்டி சேலம்,
மணி(55) த/பெ பழனி விவேகானந்தர் தெரு மணியனூர் சேலம்.
சுரேஷ் சந்திரன், அரசமரத்து கரட்டூர் கோவில் அருகில் திவ்யா தியேட்டர் அருகே கொண்டலாம்பட்டி ,சேலம்
ஆகிய மூன்று நபர்களும்
சரவணன் என்பவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரிய வருகிறது. கடந்த வருடம் வெண்ணந்தூர் காவல் நிலைய எல்லையில் EB டிரான்ஸ்பார்மர் திருடிய வழக்கு உள்ளது. இதே வழக்கில் மணி என்பவருக்கும் வழக்கு உள்ளது