பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூரில் அண்மையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சை கேட்டு மொழி காக்கும் சிறப்பு திட்டத்திற்கு ரூ.1000 மணி ஆர்டர் அனுப்பி வைத்தார்.
கடலூரில் பெற்றோர்கள் பாதுகாப்பு குறித்தும், மொழி பாதுகாப்பு குறித்தும் தமிழக முதலமைச்சர் பேசிய உரையை தொலைக்காட்சியில் பார்த்த நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவி நிதர்சனா தனது சேமிப்பில் இருந்து ஆயிரம் ரூபாயை மணி ஆர்டர் மூலம் மொழியை காக்கும் நமது முதல்வரின் சிறப்பு திட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மத்திய அரசு தமிழ்நாடு கல்வித்துறைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்காமல் காலதாமம் செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். இச்செய்தியை தொலைக்காட்சி வாயிலாக பார்த்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசிக்கும் நெசவாளர் சரவணன் மகள் 11-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி நிதர்சனா பார்த்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் கொடுக்கும் பணத்தை சேமித்து வைத்திருந்த மாணவி அதிலிருந்து ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு முதலமைச்சரின், மொழி காக்கும் நமது முதல்வரின் சிறப்பு திட்டத்திற்கு மணி ஆர்டர் அஞ்சல் வழியில் அனுப்பியுள்ளார். இதனை அனைவரும் பாராட்டினர்.