மாவட்ட ரோட்டரி சங்கம் (2982) பப்ளிக் இமேஜ் டீம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி முதல் ஏற்காடு வரையிலான 300 கி.மீ. தொலைவிற்கான இரு சக்கர புல்லட் வாகனப்பேரணிக்கு ராசிபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பிப்.21-ல் துவங்கிய இப்பேரணி தருமபுரி, மேச்சேரி, மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் வழியாக ராசிபுரம் வந்தது.

முன்னதாக ராசிபுரம் ஆண்டகளூர்கேட் வந்த வாகனப் பேரணிக்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம், ரோட்டரி பப்ளிக் இமேஜ் சேர்மேன் ஆர்.ரவி (எ) திருமூர்த்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ராசிபுரம் நகரில் பழைய பஸ் நிலையம், கச்சேரித்தெரு, ஆத்தூர் சாலை வழியாக சென்று புதிய பேருந்து நிலையம் முன்பாக பொதுமக்களுக்கு தலைகவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், வானக உரிமம் பெற்று வாகனம் இயக்க வேண்டியதன் அவசியம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

பின்னர் ரோட்டரி சங்க நிறுவனர் பால் ஹாரீஸ் தினம் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் இப்பேரணி நாமகிரிப்பேட்டை வழியாக ஆத்தூர் சென்றது. இப்பேரணி பிப்.23-ல் (ஞாயிற்றுக்கிழமை) ஏற்காட்டில் நடைபெறும் ரோட்டரி பப்ளிக் இமேஜ் நடத்தும் கருத்தரங்கு அரங்கில் முடிவடையும்.