ராசிபுரம் அருகே காவல்துறையினர் நடத்திய வாகனச் சோதனையில் பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு 39 கிலோ போதைப்பொருள்கள் கடத்தி வந்ததாக சத்துணவு அமைப்பாளர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் தளபதிசமுத்திரம் சமாதானபுரம் சர்ச் தெரு பகுதி சேர்ந்தவர் அருள்செல்வி (49). பழவுர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 18 ஆண்டாக சத்துணவு அமைப்பாளராக உள்ளாராம். இவர், பெங்களூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் தனியார் சொகுசு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது சேலம் – நாமக்கல் தேசிய மல்லூர் பகுதியில் இரவு ரோந்து போலீஸார் நெடுஞ்சாலையில் டிராவல்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்று பேருந்தில் புகையிலை பொருட்கள் கொண்ட பைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இதனை கடத்திச் சென்ற பேருந்தில் பயணித்த அருள்செல்வியை விசாரித்தனர். இவர் பெங்களூரில் இருந்து கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டார். அவரிடம் நான்கு பைகளில் இருந்து புகையிலை பொருட்கள், போதை உண்டாக்கும் கூலிப் போன்ற 39 கிலோ தடை செய்யப்பட்ட புகையில் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த வெண்ணந்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர். மேற்கொண்டு இதன் பின்னணியில் யாராவது உள்ளார்களா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.