நாமக்கல் தாலுகா டயர் ரீட் டிரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் ஆர்.வரதராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
சங்கச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் மல்லீஸ்வரன் வரவு செலவு கணக்கு வாசித்தார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
வெளிநாட்டில் இருந்து உற்பத்தி செய்து இந்தியாவிற்க்கு விற்பனைக்கு வரும் தரமற்ற டயர்களை மத்திய அரசு தடை செய்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டயர்களுக்கு மட்டுமே விற்பனைக்கு அனுமதி தர வேண்டும்.
நாமக்கல் சுற்றுவட்டப் பாதை (ரிங் ரோடு) பணிகளை விரைந்து முடித்து நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின் கட்டணத்தில் சலுகை(விசைத்தறி உரிமையாளர்களுக்கு) போல் வழங்க அறிவிப்பு வழங்க வேண்டும்.
மேலும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் சங்க துணை தலைவர் தர்மலிங்கம், துணை செயலாளர்கள் வெங்கடேஷ்,ஹரி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.