ஜே.சி.ஐ., நாமக்கல் துளிர் சார்பாக பிப்ரவரி மாத உறுப்பினர்கள் கூட்டம் நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள சரவணா கிச்சனில் நடைபெற்றது.
தலைவர் அபி சுரேஷ் விழாவிற்கு தலைமை வகித்தார். செயலாளர் மல்லேஸ்வரன், பொருளாளர் வினோத்குமார், முன்னாள் தலைவர்கள் ஆடிட்டர் நாகராஜன், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைவர்கள் நவநீதன்,கோகுல், ஆகியோர் கூட்டத்திற்கான ஏற்பாடு செய்து இருந்தனர்
சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பின் செயலாளர் சி.ஆர்.ராஜேஷ் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.