நாமக்கல் மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டிகள் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி தலைமையில்
நாமக்கல் SPM அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் இதற்கான தொடக்க விழா நடைபெற்றது…

இத்தொடக்க விழாவில் , பள்ளித்துணை ஆய்வாளர்கள் சு. கிருஷ்ணமூர்த்தி , கை.பெரியசாமி, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அலுவலர்கள், நடுவர்களாக பணியாற்றியவர்களுக்கும் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டது…
முதன்மை கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தொடக்க விழாவில் அனைவரையும் வரவேற்று, ஒருங்கிணைத்து போட்டிகளை நடத்தினார். மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளி துணை ஆய்வாளர் கை .பெரியசாமி பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு திட்டங்களைக்குறித்தும், வெற்றி பெறும் மாணாக்கர்கள் வெளிநாட்டு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவர் என்பது குறித்து விளக்கிக் கூறினார்.
பின்னர் நடைபெற்ற பேச்சு , கட்டுரை, கவிதை மற்றும கதை கூறுதல் போட்டிகளில் 15 வட்டாரங்களில் இருந்து 120 மாணாக்கர்கள் . போட்டிகளின் 24 பேர் நடுவர்களாகவும், தமிழ்பேச்சாளர் பி. தட்சிணாமூர்த்தி பங்கு பெற்று முடிவினை அறிவித்தனர்.
மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி், கவிதை மற்றும் கதை கூறுதல் போட்டிகளில் முதலிடம் பெற்ற 8 மாணாக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.