ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை ( 15.02.2025) துவங்குகிறது.

இதனைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் சிவன் கோயிலில் இருந்து அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் நடராஜர் கோவிலுக்கு அழைத்து வருதல், பின்னர் கோவிலில் அபிஷேக ஆராதனைகள், மாலை கொடியேற்று விழா நடைபெறும். மார்ச் 3-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் பல்வேறு கட்டளைதாரர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாள்தோறும் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனம், யானை வாகனம், கிளி வாகனம், புலி வாகனம்க, காமதேனு வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவிதி உலா அழைத்து வரப்படுவார்.
பிப்ரவரி 26 ஆம் தேதி அம்மன் சக்தி அழைத்தல், அக்னிகுண்டம் பற்றவைத்தல், சுவாமி ஊஞ்சலாடுதல், பந்த பலியிடுதல், பூ மாலை உள்ளிட்ட நிகழ்வுகளும், பிப்ரவரி 27 காலை தீ மிதித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து பிப்ரவரி 28 ஆம் தேதி சுவாமி ரத ஊர்வலம் நடத்தப்படுகிறது. முக்கிய நிகழ்வான மயான கொள்ளை பூஜை மார்ச் 1ஆம் தேதி நடைபெறும். மார்ச் 2-ல் சத்தாபரணம் மார்ச் 3-ல் மஞ்சள் நீராடல் நிகழும் நடைபெறுகின்றன. இதனை தொடர்ந்து பூசாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் ஏ.மாதேஸ்வரன் ஏ.விஸ்வநாதன் எஸ்.சுப்பிரமணியம், எஸ்.பிரபு ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.