தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தேசிய அளவிலான சிலம்ப போட்டி கன்னியாகுமரியில் நடந்தது. இதில் குமாரபாளையம் பகுதி மாணவர்களான கவுதம் ஸ்ரீ நிதீஷ், சம்யுக்தா, வெங்கட் பிரணவ், அபினேஷ் ஆகியோர் பல்வேறு வயது, பல்வேறு எடைப்பிரிவுகளில் முதலிடமும், விகேஷ் மூன்றாமிடமும், சம்யுக்தா, ஸ்ரீநிதீஸ் ஒற்றை வாள் வீச்சில் மூன்றாமிடமும், பெற்று தங்கம் வெள்ளி பதக்கங்கள் பரிசாக வென்ரு சாதனை படைத்தனர். இவர்களை பயிற்சியாளர் வெங்கடேசன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.