நுகர்வோர் பாதுகாப்பு விருதுகள்
நுகர்வோர் பாதுகாப்பு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பொது விநியோகம் திட்டம் தொடர்பான பணிகளில் நாமக்கல் மாவட்டத்திற்கு 2022-23 ஆம் ஆண்டில் மூன்றாம் பரிசு, 2023-24 ஆம் ஆண்டில் முதல் பரிசு பெற்றதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் (29.01.2025) நடைபெற்ற மாநில அளவிலான சிறுதானிய உணவு திருவிழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கூடுதல் முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உள்ளனர்.