குமாரபாளையம் அருகே நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் மாணவிகளை தனது கை கால்களை அமுக்கி விடக்கூறியதாக புகார் கூறி பெற்றோர் சிலர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் மதிய நேரங்களில் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவிகளை தனது கை,கால்களை அமுக்கி விடுமாறு கூறுவதாக புகார் கூறப்பட்டது. மேலும் அவர் சில மாணவிகளிடம் தவறாக நடப்பதாகவும் கூறி பெற்றோர் சிலர் பள்ளிக்கு சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பள்ளியில் விசாரணை நடத்த சென்றனர் அப்பொழுது இன்று பள்ளியில் அறிவியல் ஆசிரியர் விடுப்பில் உள்ளதால் கல்வித் துறை அதிகாரிகளை வரவழைத்து மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இது குறித்து பின்னர் ஆசிரியரிடம் விசாரணை நடத்தி துறை ரீதியான அளவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறி சென்றனர்.