நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகம், ராசிபுரம் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை குறித்த விழிப்புணர்வு பேரணி நாமகிரிப்பேட்டையில் அண்மையில் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற இப்பேரணி பேரூராட்சி அலுவலகம் முன் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

இதில் மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்போம், மஞ்சப்பை பயன்படுத்துவோம், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்பு போன்றவை குறித்த தட்டிகள் ஏந்தியவாறு பேரணியில் சென்றனர். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பேரூராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர். பின்னர் அக்கலாம்பட்டி ஏரியில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ரோட்டரி சங்கத்தினர், மாணவ மாணவியர் ஈடுபட்டனர்.
