குமாரபாளையம் நகராட்சி வார்டு எண்: 4 ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் படித்துறை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது. குமாரபாளையம் நகராட்சி வார்டு எண் 4 ல் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024 – 25 ன் கீழ் அங்காளம்மன் கோவில் பின்புறம் ஆற்றங்கரையில் படித்துறை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நகர மன்ற தலைவரும், வடக்கு நகர திமுக பொறுப்பாளருமான விஜய் கண்ணன் தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி. பிரகாஷ், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலர் மதுரா செந்தில் ஆகியோர் பூமிபூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர். இது பற்றி அப்பகுதி பெண்கள் கூறியதாவது: குமாரபாளையம் அங்காளம்மன் கோவில் பின்புறம் உள்ள காவிரி படித்துறையில், படிகள் சேதமாகி, ஆற்றில் இறங்கி செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இது குறித்து நகராட்சி தலைவர் வசம் கூறியதன் பேரில், படித்துறை அமைக்க பூமி பூஜை போடப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி என்றனர். இதில் துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் புஷ்பா, உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் காவிரி கரையில் படித்துறை அமைக்க பூமிபூஜை
RELATED ARTICLES