தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய 3 கட்டப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து முதல்கட்டமாக ராசிபுரம் வட்டாச்சியர் அலுவலகங்கள் முன்பு கிராம வருவாய் ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சங்கத்தின் ராசிபுரம் வட்டத் தலைவர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பரமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பழைய ஒய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்திப் பேசினார். இரண்டாம் கட்டமாக பிப்., 2-ல் காத்திருப்பு போராட்டமும், 3ம் கட்டமாக, பிப். 27 -ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டமும் நடத்திட முடிவு செய்துள்ளனர். ஆர்பாட்டத்தில் செயலாளர் தனசேகரன், பொருளாளர் குமார் உள்ளிட்ட, பலரும் பங்கேற்றனர்.