Wednesday, February 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்தமிழக எல்லையில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்: கேரள ஆளுநரிடம் நாமக்கல் எம்பி., நேரில்...

தமிழக எல்லையில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்: கேரள ஆளுநரிடம் நாமக்கல் எம்பி., நேரில் மனு

நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு முட்டை ஏற்றி செல்லும் லாரிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இருந்தும் வழக்கு பதிவு செய்வது தடுக்க வேண்டும். தமிழக எல்லையில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாமக்கல் எம்பி., வி.எஸ்.மாதேஸ்வரன் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாராளுமன்ற நிலைக்குழு (சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்) கூட்டம் இன்று (ஜன.7) நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் V.S.மாதேஸ்வரன் கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இந்த சந்திப்பின் போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில் ராஜா, பரணிதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சந்திப்பில் டேங்கர் லாரிகளுக்கு ஆன்லைன் கேஸ் பதிவு செய்வதால் லாரி உரிமையாளர்களுக்கு ஓட்டுநர்களுக்கும் தெரிவதில்லை என்ற நிலை இருந்து வந்துள்ளது. அதனை போக்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் தெரியப்படுத்தவும் உரிய ஆவணங்கள் இருந்தும் வழக்கு பதிவு செய்வதை தடுக்கவும், கேரளாவில் கொங்கு வேளாளர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும் வலியுறுத்தி கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!