நாமக்கல் வடக்கு மாவட்ட அமமுக சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் 108-வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, கட்சியின் மண்டல பொறுப்பாளரும், துணை பொதுச்செயலாளருமான எஸ். சண்முகவேல் வழிகாட்டுதல்படி எம்ஜிஆர் பிறந்த தின விழா அனைத்து பகுதிகளும் கொண்டாடினர்.
நாமக்கல் வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் ஏ. பி.பழனிவேல் தலைமையில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து புதிய கொடிகளை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் எஸ். பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் பாலசுப்ரமணியம், ராசிபுரம் செயலாளர்கள் பூபதி, தர்மராஜ், சுப்பராயன், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.