பிரபல சமையல் கலைஞர் குரும்பம்பட்டி அருள் நடுவராக பங்கேற்பு.
ஜே.சி.ஐ., நாமக்கல் துளிர் சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமையல் போட்டி சின்ன முதலைப்பட்டி நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் அபி சுரேஷ் விழாவிற்கு தலைமை தாங்கினார், செயலாளர் மல்லேஸ்வரன், பொருளாளர் வினோத்குமார் , முன்னாள் தலைவர்கள் ஞானக்குமார், ராஜேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைவர்கள் நவநீதன்,கோகுல், ஜீவானந்தம், கிரிதரன் ஆகியோர் சமையல் போட்டிக்கான பணிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

போட்டியில் கலந்து கொண்டவர்கள் சைவ, அசைவ உணவுகளை சமைத்தனர். அனைத்து உணவுகளையும் நடுவர் அருள் சுவைத்துப் பார்த்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமையல்களுக்கு பரிசுகள் வழங்கினாா். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. ஜே.சி.ஐ., நாமக்கல் துளிர் செயலாளர் மல்லேஸ்வரன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் .