Wednesday, February 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைபாவை பொறியியல் கல்லூரி - முத்தாயம்மாள் கல்லூரிகளில் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்

பாவை பொறியியல் கல்லூரி – முத்தாயம்மாள் கல்லூரிகளில் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்

ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி- வநேத்ரா முத்தாயம்மாள் கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வேளாண் பொறியியல் துறையின் வேளாண் மன்றம் மற்றும் பாவை பாலிடெக்னிக் வேளாண் பொறியியல் துறை சார்பில் பொங்கல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார்.

இதில், வேளாண் பொறியியல் துறை மாணவியர் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். தமிழர்களின் பாரம்பாியத்தை வெளிப்படுத்தும் விதமாக விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து விவசாயிகளின் பண்பாடு, கலாச்சாரம், அதே சமயத்தில் மாணவிகளின் பலதரப்பட்ட திறமைகளை வெளிக் கொண்டு வரும் சிலம்பாட்டம், உறி அடித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி போன்ற பாரம்பாிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. விழாவில் மாணவர்களிடம் பேசிய கல்வி நிறுவனத் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன்,

பொங்கல் திருவிழாவினை கொண்டாடும் இவ்வேளையில், வேளாண் பொறியியல் மாணவர்களாகிய நீங்கள் உழவுத் தொழிலின் மாண்பினையும், விவசாயிகளின் பெருமையினையும் சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். உங்கள் கல்வியின் மூலமாக ஆக்கப்பூர்வமான மாற்றங்களையும், புது, புது யுக்திகளையும் வேளாண் தொழிலில் உருவாக்க வேண்டும். ஏனென்றால் வேளாண் மாணவர்களாகிய உங்களால் தான் விவசாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். அதனை உணர்ந்து நீங்கள் செயலாற்ற வேண்டும் என பேசினார். விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் கே.கே.ராமசாமி, பாவை பொறியியல் கல்லூரி முதல்வர் பிரேம்குமார், உடற்கல்வி இயக்குநர் சந்தானராஜா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முத்தாயம்மாள் கல்லூரியில்…

இதே போல் ராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூசனில் பொங்கல் விழா நடைபெற்றது.முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்தாயம்மாள், பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன், முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் தாளாளர் கே.பி.ராமசாமி தலைமை வகித்தார்.

செயலாளர் இரா.முத்துவேல், செயல் இயக்குநர் எஸ்.மஞ்சு, இயக்குநர் கல்வி முனைவர் இரா.செல்வகுமரன், மூன்று கல்லூரி முதல்வர்கள் எஸ்.பி.விஜய்குமார், முனைவர் எம்.மருதை, முனைவர்.ஆர்.மணி, கலை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். ஆ.ஸ்டெல்லா பேபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளான தனிநபர் மற்றும் குழு நடனம், கிராமிய கலைகளான பறை இசை, கும்மி, சிலம்பாட்டம்
போன்றவையும், கபடி, கயிறு இழுத்தல், பானை உடைத்தல், இசை நாற்காலி, முறுக்கு கடித்தல் போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!