நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி மஹேந்ரா இன்டர்நேஷனல் பள்ளியில் 12 -ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் மஹேந்ரா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஜி.பரத்குமார் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் சம்பத்குமார் வரவேற்றார். பள்ளிச் செயலாளர் ப.வள்ளியம்மாள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். இதில் திரைப்பட நகைச்சுவை நடிகர் கே.பி.ஒய் புகழ் குரேஷி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பள்ளியின் முதல்வர் திரு ஜெயக்குமார் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் பங்கேற்றனர்.