சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குநர் சீமா அகர்வால், காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவுபடி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் முனைவர் L. பாலாஜி சரவணன், ஈரோடு சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் M. ராஜபாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி 08.01.2025 ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர் மு.ஆறுமுக நயினார் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் மு. திவாகர் அவர்களுடன் இணைந்து போலீசார் மற்றும் நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் இணைந்த கூட்டு சோதனையாக தகவலின் பேரில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா பள்ளிபாளையம் அருகேயுள்ள ஆவாரம்பாளையம் முனியப்பன் கோயில் தெருவில் உள்ள முத்து என்பவருக்கு சொந்தமான தகர செட்டில் சோதனைச் செய்ய அங்கு 21 மூட்டைகளில் சுமார் 1 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றி விசாரணை செய்த போது அப்பகுதியை சேர்ந்த கோமதி என்பவர் கொண்டு வந்து பதுக்கி வைத்தது தெரியவந்து அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.