முள்ளுக்குறிச்சி ஸ்ரீ சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அண்மையில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கூடைப் பந்து போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்கள் வரும் 09.01.25 அன்று நடைபெற உள்ள மாநிலப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இதை அடுத்து பள்ளி முதல்வர் பூர்ணிமா தனபால், நிர்வாக அலுவலர் த.நவீன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.