வாசவி கிளப் இன்டர்நேஷனல் ( மாவட்டம் -V501A) மாவட்ட ஆளுநராக A. வெங்கடேஸ்வர குப்தா பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கான விழா ஞாயிற்றுக்கிழமை சேலம் வின்சர் கேசில் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் வாசவி கிளப் புதிய நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மாவட்ட ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட A.வெங்கடேஸ்வர குப்தா ரோட்டரி மாவட்டம் 2982 கல்வி குழு தலைவராக பொறுப்பு வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆளுநர் A. வெங்கடேஸ்வர குப்தா உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் M.முருகானந்தம், மாவட்ட ரோட்டரி ஹேப்பி ஸ்கூல்ஸ் சேர்மன் K.S.கருணாகர பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.