அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது, குற்றவாளி சார் என்றும் சொல்லும் அவர் யார் என அறிந்து அவரையும் கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சரும், அதிமுக நாமக்கல் மாவட்ட செயலாளருமான பி.தங்கமணி வலியுறுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க பட்டதை கண்டித்து ராசிபுரம் பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான P.தங்கமணி தலைமையில் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் டாக்டர் v.சரோஜா, மாவட்ட அதிமுக வர்த்தக பிரிவு செயலாளர் ராகா சு.தமிழ் மணி, திருச்செங்கோடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன் சரஸ்வதி, ராசிபுரம் நகர அதிமுக செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு மன்ற நிர்வாகிகள் என பலரும் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி மேலும் பேசியது:
பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை ஆர்பாட்டத்துக்கு அனுமதி கொடுக்காமல் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களை கைது செய்ய காத்திருக்கிறது. இதற்கெல்லாம் அஞ்சுகின்ற இயக்கம் அண்ணா திமுக அல்ல. கடந்த 23-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் திமுகவை சேர்ந்தவர் என சொல்லப்படும் ஞானசேகரன் என்பவர் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்தும், குற்றவாளி சார் என்று சொல்லும் அவர் யார் என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. அந்த சார் யார் என்று கேட்டுதான் எடப்பாடியார் அறப்போராடத்தை அறிவித்தார்கள். ஆனால் தமிழக அரசு காவல்துறையை கொண்டு வந்து எல்லா மாவட்டங்களில் போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது. ஆனாலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் இருக்கும் பெண்கள், கல்லூரி மாணவியர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். புோதை மாநிலமாக தமிழகம் உருவாகிவிட்டது அதனையும் தடுக்க வேண்டும். போதை பழக்கத்தால் தமிழகம் இன்று இருண்டு விட்டது. இதற்கு திமுக அரசு தான் காரணம். இதனை கண்டித்தே இந்த போராட்டம். காவல்துறை என்ன செய்து கொண்டுள்ளது என கேள்வி எழுந்துள்ளது. அதனை விட்டு போராட்டம் நடத்துபவர்களை காவல்துறை கைது செய்கிறது.
அதிமுக ஆட்சியில் கல்லூரி மாணவியர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. சட்டத்தின் ஆட்சி நடந்தது. இன்றைய தினம் ஆட்சி என்பது குற்றம் செய்பவர்களுக்கு பாதுகாக்கும் ஆட்சியாகவுள்ளது. ஏனென்றால் இன்று குற்றம் செய்பவர்கள் திமுகவை சேர்ந்தவர்களாக உள்ளனர். போராட்டத்திக்கு பின் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை என அமைச்சர்கள் கூறுகின்றனர். காவல் ஆணையர் போனில் அவர் யாருடமும் பேசவில்லை என கூறுகிறார். ஆனால் அந்த மாணவி யாரிடமோ பேசினார் என எப்ஐஆரில் கூறுயிருக்கிறார். இதனால் இதனை விசாரித்து அவரையும் கைது செய்ய வேண்டும் என்றே இந்த போராட்டம் நடக்கிறது. எதிர்காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான நல்லாட்சி மலர வேண்டும் என்றால் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றார்.