Tuesday, April 29, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்கண்காட்சி திறப்புவிழா

கண்காட்சி திறப்புவிழா

நாமக்கல் பிஎன்ஐ பிரம்பா (BNI BRAMMA) சார்பில் நடைபெறும் தொழில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியின் திறப்புவிழா நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கண்காட்சியினை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் கொமதேக மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன், இணை செயலாளர் தேவி உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் ராகவன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் எவரெஸ்ட் ராஜா, ரிஸ்வான், இளைஞரணி மாநகர அமைப்பாளர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிஎன்ஐ பிரம்பா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இக்கண்காட்சி நாளை ஞாயிறுக்கிழமை வரை நடைபெறும் என பிஎன்ஐ பிரம்மா நிர்வாகி குமார் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!