நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ஏ.கே. சமுத்திரத்தில் உள்ள ஞானோதயா இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவி தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளளர்.
தமிழ் மொழி இலக்கியத்த திறனறித் தேர்வு 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை அரசு தேர்வுகள் இயக்கம் நடத்தி வருகிறது. இத்தேர்வை சுமார் இரண்டு இலட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதியிருந்தனர். இத்தேர்விற்கான முடிவுகள் 25.12.2024 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி உட்பட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், ஞானோதயா இண்டர்நேஷனல் பள்ளி மாணவி செல்வி. விஜிலா வி கோ தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளளார்.
பள்ளியின் தலைவர் அரங்கண்ணல் மற்றும் தாளாளர் திருமதி. மாலாலீனா மாணவிக்கு பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்தினர்.
இதில் பள்ளியின் முதல்வர் திருமதி. ரோஸ்லின் பபிதா, பள்ளியின் நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன்,பள்ளியின் தமிழாசிரியர் குமரேசன் மற்றும் மாணவியின் பெற்றோர் உடனிருந்தனர்.
மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் முதல்வர், மற்றும் தமிழாசிரியர் குமரேசன் அவர்களை பள்ளியின் தலைவர் வாழ்த்தினார்.