நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல தனியார் நிதி நிறுவனம் Micro Finance என்ற பெயரில் அடாவடி வட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியரின் நேர் முக உதவியாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக அளித்த மனு விவரம்:
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கந்து வட்டி கும்பல்கள் கிராமப்புற பகுதிகளில் குறிப்பாக பட்டியலின மக்கள் sc சமூகத்தை சார்ந்த எழுதப் படிக்கத் தெரியாத பெண்களை குறி வைத்து குழு லோன் என்ற பெயரில் கடன் வாங்க வைத்தும் மேலும் வீட்டுக் கடன் என்ற பெயரில் வீடு மற்றும் காலி நிலத்தின் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு சிறிய தொகையை கடனாக வழங்கி இரண்டு வருடத்தில் முடிய வேண்டிய கடனை நான்கு, ஐந்து ஆண்டுகளாக விரிவுபடுத்தி அந்த வட்டி பணத்தில் பிழைப்பு நடத்திவருகிறது. இது போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அந்நிறுவனத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தர வேண்டியும், RBI சட்டங்களை கொஞ்சம் கூட கடைப்பிடிக்காத நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கிழக்கு மாவட்ட செயலர் வினோத் சேகுவேரா, வழக்குரைஞர் சசிகுமார் ாகியோர் மனு அளித்தனர்.