தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் 40-வது பிறந்த தின விழா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கட்சியினர் பலரும் கலந்து கொண்ட விழாவில் கேக் வெட்டி கொண்டினர். இதனை தொடர்ந்து அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ராசிபுரம் நகர திமுக செயலாளர் என்.ஆர்.சங்கர், மாவட்ட பொருளாளர் ஏ.கே.பாலச்சந்தர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே.பி. ஜெகநாதன், ஆர்.எம்.துரைசாமி, மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.